தமிழக அரசு எங்களை கண்டு கொள்ளாத நிலையில், தேர்தல் நேரம் என்பதால் நாங்களும் அவர்களை புறக்கணிப்போம் அய்யா வழி தலைவர். பால பிரஜாதபதி அடிகளார்….
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் 189 வது அவதாரதின விழா நேற்று முன்தினம் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுவாமி தோப்பில் அய்யா வழி சமய தலைவர் பால பிரஜாத பதி அடிகளார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதன் முதலாக அய்யா வைகுண்டரின் அவதார தினத்திற்கு அரசு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் வழங்கி அங்கீகாரம் தந்தார்கள். ஆனால் அவர்களின் பெயர் சொல்லி கொள்ளும் தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களை பாரபட்சமாக கண்டுகொள்ளாமல் செயல்படுகின்றனர். கன்னியாகுமரி பகுதிகளில் அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலத்தில் போலீசார் பெரும் இடர்பாடுகளை கொடுத்தார்கள். அம்மா அவர்கள் விருப்பப்பட்டு அய்யா வழிக்கு தேர்வு செய்யபட்ட காரியங்களை இன்றைய அரசு வேண்டும் என்று புறக்கணித்து வருகிறார்கள். அவதார தினத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வழங்க பட்ட அரசு விடுமுறையில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் அண்மையில் பிரிக்கபட்டது. ஆனால் பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு அவதார தினமான அன்று விடுமுறை வழங்கப் படவில்லை என்பதில் அய்யா வழி சமூகத்தை புறக்கணித்தது உறுதியானது. தேர்தல் நேரம் என்பதால் நாங்களும் அவர்களை புறக்கணிப்போம் என்று கூறிய பால பிரஜாத பதி அடிகளார், நாகர்கோவிலில் கேப்ரோட்டிற்கு அய்யா வைகுண்டரின் பெயர் சூட்ட கோரிக்கை வைத்தோம் இதுவரை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால் தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் முடிந்ததும் மாபெரும் போராட்டங்கள் அய்யா வழி சமூகம் சார்பில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறிய அவர், கேரளாவில் பாடபுத்தகங்களில் கூட அய்யா வைகுண்டரின் வரலாறு இடம்பெற்று உள்ளது ஆனால் ஒரு தமிழகத்தில் பாட புத்தகங்களில் இடம் பெறாதது வேதனை அளிப்பதாகவும், ஒரு வேளை அய்யா வைகுண்டரை ஒரு தமிழராக இந்த அரசு ஏற்று கொள்ளவிள்ளையா ? என அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்…