மாதிரி வாக்கு பதிவு செய்வது குறித்த முகாமினை மாவட்ட ஆட்சித்‌ தலைவரும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலருமான திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ தொடங்கி வைத்து பார்வையிட்டார்

Loading

தருமபுரி பேருந்து நிலையத்தில்‌ சட்டமன்ற பொது தேர்தல்‌ 2021 ஏப்ரல்‌ 6ஆம்‌ நாள்‌ நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு பதிவு செய்வது குறித்த முகாமினை மாவட்ட ஆட்சித்‌ தலைவரும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலருமான திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ தொடங்கி வைத்து பார்வையிட்டார்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.க.ராமமூர்த்தி, தருமபுரி சார்‌ ஆட்சியரும்‌ தருமபுரி சட்டமன்ற தொகுதி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலருமான திரு. மு.பிரதாப்‌ மாவட்ட ஆட்சியர்‌ நேர்முக உதவியாளர்‌ பொது திரு.நாராயணன்‌, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ திரு.மு.பாரதிதாசன்‌, தனி துணை ஆட்சியர்‌ சமூக பாதுகாப்பு திட்டம்‌ திருமதி.சாந்தி, வட்டாட்சியர்‌ திரு.ரமேஷ்‌, நகராட்சி ஆணையர்‌ திரு.தாணுமூர்த்தி, பொறியாளர்‌ திரு.சுரேந்திரன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply