திருவள்ளூரில் தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் :
திருவள்ளுர் மார்ச் 02 : திருவள்ளூர் அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் பொக்லைன் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார்.சங்க மாநில தலைவர் கத்திபாரா விவேக் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணை தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் கத்திபாரா விவேக் ஆகியோர் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பொக்லைன் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து டீசல் விலை பன்மடங்கு உயர்ந்து வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதித்து வருகிறது.இயந்திர உதிரிபாகங்கள் விலையேற்றம், போன்றவற்றால் தங்களது வாகனங்களுக்கு மாத தவணை கூட செலுத்த முடியாத நிலை உள்ளது.எனவே பொக்லைன் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 கட்டணம் உயர்த்தி வழங்க வேண்டும் இல்லையெனில் அடுத்த கட்டமாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் எச்சரித்தனர்.