நாமக்கல்லில் 36- ஆவது தேசியப் புத்தகத் திருவிழா துவக்கப்பட்டது.
மாவட்ட அரசு மருத்துவமனை அருகே, மத்திய அரசின் தேசியப் புத்தக அறக்கட்டளை யுடன் இணைந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைத்திருக்கும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு முன்னாள் வட்டாட்சியர் தம்பிராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட நூலக அலுவலர் ரவி, முன்னிலை வகித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் புத்தகக் கண்காட்சியை ரிப்பன் கத்தரித்துத் துவக்கி வைத்தார்.
நாமக்கல் கவிஞர் ‘ராமலிங்கம் பிள்ளை சிந்தனைப் பேரவை’ யின் தலைவர் டி எம் மோகன், முதல் விற்பனையைத் துவக்கி வைக்க, அதனைத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ப. நவலடி பெற்றுக் கொண்டார்.
மார்ச் 31-ஆம் தேதி முடிய நடைபெறவிருக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விவசாயம், கணினி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, மற்றும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், இலக்கியம், சுயமுன்னேற்றம், பொது அறிவுப்போட்டி போன்ற எண்ணற்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன.
துவக்க விழாவில், அரசுத் தேர்வுத் துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், அரசு கல்லூரிகள் ஆய்வக உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ரவீந்திரன், கலால் மேற்பார்வை வட்டாட்சியர் தமிழ்மணி, தமிழ்நாடு கலை – இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் நாணற் காடன், நாமக்கல் ரோட்டரி சங்கத் தலைவர் விஜயகுமார், லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், அரசு மகளிர்க் கல்லூரிப் பேராசிரியர் அனந்தநாயகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புத்தகத் திருவிழாவின் துவக்கத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் ரங்கராஜன் வரவேற்புரையாற்றினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனத்தின் சேலம் கிளை மேலாளர் டி. சத்தியசீலன் செய்திருந்தார்.