கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பணிமனை முன்பு பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் கரணமாக 75 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை…
கன்னியாகுமாரி :- தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் இடைக்கால நிவாரணம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பணிமனை முன்பு என்று பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியாக தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது இது ஒரு நாளைக்கு 33 ரூபாய் என்ற அடிப்படையில் உள்ளதால் இந்த பணம் தொழிலாளிக்கு டீ செலவுக்கு கூட போதாது என்ற நிலையில் உள்ளது. 23-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என முதல்வர் அறிவித்து இதுவரை அதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக குமரியில் 75 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்…