கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் முன்விரோதம் காரணமாக தண்ணீரில் விஷம் கலந்ததால் 6 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு…. ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமாக 4 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு கோழிப்பண்ணைகளை கடந்த 45 நாட்களுக்கு முன்பு ராஜன் என்பவருக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜன் கோழிப்பண்ணை வந்த போது அங்கிருந்த சுமார் 6 ஆயிரம் கோழிகள் மர்ம்மான முறையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அனைத்து கோழிகளும் உயிர் இழந்ததால் கோழிகளுக்கு வைக்கப்படும் தண்ணீர் டாங்கில் விஷம் கலக்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அந்த கோழிப்பண்ணையில் ஏற்கனவே பணி புரிந்து வந்த துவரங்காடு பகுதியை சேர்ந்த சாஜன் என்பவர் கோழி தீவனங்களை திருடியதாக கூறி நீக்கப்பட்ட நிலையில் முன்விரோதம் காரணமாக சாஜன் தான் கோழிகளுக்கான தண்ணீர் டாங்கில் விஷம் கலக்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள சாஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *