பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமிய திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணை…
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி கூட்ரோடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய்த்துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் 358 பயனாளிகளுக்கு ரூ. 96. 29 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா. 679 பயனாளிகளுக்கு ரூ, 1. 04. கோடி மதிப்பில் மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, சமூக நலத்துறை சார்பில் 300 பயனாளிகளுக்கு ரூ, 2.21 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமிய) திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணை ஆகியவை.மற்றும்அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர், எஸ். இராமச்சந்திரன் வழங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ,வி, பன்னீர்செல்வம், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே, மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட சமூக நல அலுவலர், கந்தன் ,அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயனாளிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.,
மேலும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்பு அக்ரமணங்களை வரன்முறைப் படுத்தி 358 பயனாளிகளுக்கு ரூ, 96. 29 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது, மேலும் வருவாய்த்துறை சார்பில், கலசபாக்கம், போளூர், செங்கம், ஆகிய வட்டத்திற்கு உட்பட்ட 216 பயனாளிகளுக்கு ரூ, 48. 13 லட்சம் மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகை, 107 பயனாளிகளுக்கு ரூ, 12. 88 ,லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 356 பயனாளிகளுக்கு. ரூ, 42.72 லட்சம் மதிப்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது, மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 48 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்படுகிறது,