பாலியல் தொழில் நடக்கும் தனியார் தங்கும் விடுதிக்கு போலீசார் சீல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஆர்.கே.ஜி தனியார் தங்கும் விடுதியில் தொடர்ந்து பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று 2 நபர்களை கைது செய்த நிலையில் தொடர்ந்து சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக போலிசாருக்கு தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டையடுத்து.
சட்டவிரோதமாக தொடர்ந்து தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடந்து வந்ததையடுத்து செஞ்சி வட்டாட்சியர் மற்றும் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் செஞ்சி காவல் ஆய்வாளர் அன்பரசு உதவி ஆய்வாளர் ராஜ ராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைத்ததால் பரபரப்பு நிலவியது.