திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சி செயலர் தற்கொலை வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்து சிறையில் அடைப்பு :

Loading

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் முதல்நிலை ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 1998 முதல் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6_ம் தேதி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ரஜனிகாந்த் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய ஊராட்சி செயலர் பாஸ்கரன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த கடிதத்தை ஆய்வு செய்த போது, கடந்த ஜனவரி மாதம் முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனாலேயே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து அவரது மனைவி மஞ்சுளா தனது கணவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மேலும் 50 லட்சம் செலவு செய்து தலைவர் பதவிக்கு வந்ததாகவும், அதனை போலி கணக்கு எழுதி பணத்தை பெற்றுத்தரவேண்டும் எனக் கூறி தொந்தரவு கொடுத்ததாலாயே மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியது மற்றும் சாதி பெயரை சொல்லி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேல் நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபு என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஒகேனக்கல் பகுதிக்கு சென்று ஹரிபாபுவை கைதுசெய்து சாதி வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 2 பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
=======================================================================

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *