சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் உணவகத்தை காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,அவர்கள் இன்று (19.02.2021) காலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணவருந்துவதற்காக செயல்பட்டு வரும் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து காவல் ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றும்படியும் அறிவுரைகள் வழங்கினார். காவல் இணை ஆணையாளர் திரு.R.சுதாகர்,காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், உணவக ஊழியர்கள் உடனிருந்தனர்.