214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்…

Loading

ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ்
214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினார்…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (17.02.2021) வருவாய்த் துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் 214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 251 பயனாளிகளுக்கு ரூ.30.12 லட்சம் மதிப்பிலான மாதம் ரூ.1000 பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் சமூக நலத் துறை சார்பில் 791 பயனாளிகளுக்கு ரூ.5.88 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. தூசி கே. மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆர். முத்துக்குமாரசுவாமி, மாவட்ட சமூக நல அலுவலர் திரு. கந்தன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் விழாவில் பேசியதாவது ‘மக்களால் நான், மக்களுக்காக நான் என மக்களாட்சி நடத்தி வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் துயில் கொண்டிருக்கும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நகரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 2000 ‘முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது, முதல் கட்டமாக 23 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் 40 கிராமங்களில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும்,
10 நடமாடும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் செயல்படவுள்ளது. முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் காலை 08.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரையும் செயல்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.2500ஃ-ம் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் கல்வி பயின்ற காரணத்தால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கணவு நனவாக்கும் வகையில் நீட் நழைவுத் தேர்வில் 7.5மூ உள்ஒதக்கீடு வழங்கினார்கள். இதன் அடிப்படையில் தமிழகத்தில் 435 மாணவர்கள் மருத்தும் படிக்க இடம் கிடைத்து, அவர்களின் மருத்துவ செலவு கட்டணமும் அரசு முழுமையாக ஏற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 12 மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளார்.

மாண்புமிகு அம்மா அரசின் வருவாய்த் துறை சார்பில் இன்று (17.02.2021) செய்யாறு சட்டமன்ற தொகுதியில், ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி, 214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. மேலும், வருவாய்த் துறை சார்பில் செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட 251 பயனாளிகளுக்கு ரூ.30.12 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- பெறுவதற்கான அனுமதி ஆணை வழங்கப்படுகிறது.

சமூக நலத் துறை சார்பில் பெண்களுக்கான திருமண உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தின் கீழ், செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 217 பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலும்,
175 பட்டதாரி பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மதிப்பிலும், மொத்தம் 392 பெண்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும், வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி, தௌ;ளார், பெரணமல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த
214 பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலும், 185 பட்டதாரி பெண்களுக்கு ரூ.46.25 லட்சம் மதிப்பிலும், மொத்தம் 399 பெண்களுக்கு ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும், ஆக மொத்தம் 791 பெண்களுக்கு ரூ.3.05 கோடி திருமண நிதியுதவி மற்றும் ரூ.2.83 கோடி மதிப்பிலான தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *