திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிற்கு சாலை பாதுகாப்பு விருது : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார் :
திருவள்ளுர் பிப் 18 : சென்னையில் உள்ள தனியார் விடுதியில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகள் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
அப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு 3 ம் இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிற்கு விருது மற்றும் காசோலைகளை வழங்கினர்.
இதில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி,சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
================================================================================