அல்லிமேடு பகுதியில் தற்காப்புற்கான கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல் : பாதுகாப்பு வழங்கக்கோரி எஸ்பி.யிடம் மனு :
திருவள்ளுர் பிப் 18 : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு பகுதியில் கடந்த மாதம் கௌதமி என்ற இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததால் அந்த பெண் கத்தியைப் பிடுங்கி கொலை செய்ததுடன் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தற்காப்புக்காக மட்டுமே இந்த கொலை நடந்ததால் அந்தப் பெண்ணை கொலை வழக்கிலிருந்து சட்டப்படி எஸ்.பி., பி.அரவிந்தன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் விடுவித்த அந்த பெண்ணை இழிவுபடுத்தும் வகையில், திருநம்பி என்று சொல்வதோடு, உங்கள் குடும்பத்தை அழித்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுப்பதால் வாழ்வதற்கே அச்சமாக இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் தீர்த்து கட்டப் போவதாக சொல்லி வருவதால் அஜீத்தின் மனைவி உளளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் கௌதமி புகார் அளித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தாருக்கு கொடுத்த தகவலையடுத்து அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருப்பதாகவும், தன்னை திருநம்பி என்று சொல்லி கேவலமாக பேசுவதால் அரசு மருத்துவமனையில் சோதனை செய்து பெண் தான் என்ற சான்றிதழையும் எஸ்பியிடம் வழங்கியுள்ளேன்.
மேலும் அஜீத்தின் மனைவி சுகன்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌதமி கோரிக்கை விடுத்துள்ளார். நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி. அரவிந்தன் உத்தரவு கொடுத்ததாகவும் கௌதமி தெரிவித்தார்.
===================================================================================================