ரூ 3 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபி 1வது வார்டில் ரூ 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பேசுகையில் தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் 12522 பகுதியிலும் உள்ள மாணவ மாணவியர் பயன் பெறும் வகையிலும் 525 பேரூராட்சிகளில் இதுபோன்று கட்டமைப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ 67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது முன்னதாக இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் தற்போது உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு அவற்றில் கபடி வாலிபால் கேரம்போர்டு டென்னிஸ் யோகா ஆகிய விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டு போட்டிகள் கலந்துகொண்ட குழுக்கள் முதல் 3 இடங்கள் பிடிக்கும் குழுக்கள் மற்ற மாவட்ட முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் குழுக்களோடு போட்டிகள் நடைபெற்று மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உற்பத்திசெய்யும் களமாக விளங்க வேண்டுமென அரசின் செயல்பாட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்குவிக்கப்பட்டு தற்போது விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று வருகிறது விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் இடம்பெறுவதற்கு 3 சதவீத பொதுஇட ஒதுக்கீடு பெறும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் கே.கே. காளியப்பன் ,கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஈரோடு மாவட்ட அலுவலர் சதீஷ் குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
Attachments area