நல வாரியத்தால் அனைத்து உறுப்பினர்கள் பயன்பெற வேண்டுகோள்

Loading

நல வாரியத்தால் அனைத்து உறுப்பினர்கள் பயன்பெற வேண்டுகோள்
ஈரோடு பிப்ரவரி 17
தமிழகத்தில் உடல் உழைப்பு, வியர்வை சிந்தும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட நலவாரியம் இன்றைய காலகட்டத்தில் வெற்றி நடை போட்டு உறுப்பினர்களுக்கு பல நன்மைகளைப் அளித்துக் கொண்டு இருக்கிறது இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் அமைக்கப்பட்ட மாவட்ட நலவாரியம் மூலம் உறுப்பினர்கள் சுமார் 19 ஆயிரம் பேர் பயன் அடைந்த வரலாறு வாரியத்தின் நிறை,குறைகளை பட்டியலிட்டு பறைசாற்றுகிறது
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கவும் தமிழ்நாடு அரசு 1982 ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல் சட்டத்தை இயற்றியது இதில் தமிழக அரசால் 17 நலவாரியங்கள் உள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்,சமூக பாதுகாப்பு,அமைப்புசாரா ஓட்டுநர்கள்,சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர்,தையல் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள்,பனைமர தொழிலாளர்கள்,கைத்தறி மற்றும் கைத்தறிபட்டு நெய்யும் தொழிலாளர்கள், காலணி,தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள், ஓவியர்கள், பொற்கொல்லர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள்,வீட்டுப் பணியாளர்கள்,விசைத்தறி நெசவாளர்கள்,பாதையோர வணிகர்கள்,கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்,சமையல் தொழிலாளர்கள்,போன்ற 17 வகையான நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. 30.11.1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு முதன் முறையாக அரசின் சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி, மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மாநிலம் முழுவதும் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு 588920 ஆண் தொழிலாளர்கள் வேஷ்டி, அங்கவஸ்திரம் மற்றும் 680630 பெண் தொழிலாளர்களுக்கு புடவை வழங்கப்பட்டது மொத்தம் உள்ள 1269550 தொழிலாளர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களான பச்சரிசி 2 கிலோ,பாசிப் பருப்பு 1 கிலோ,வெல்லம் 1 கிலோ, எண்ணெய் அரை கிலோ, ஆவின் நெய் 100 கிராம், ஏலக்காய் 5 கிராம்,முந்திரி 25 கிராம்,திராட்சை 25 கிராம்,ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய நிதியை பயன்படுத்தி வழங்கப்பட்டது தமிழ்நாட்டில் 260 மையங்களில் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காயத்ரி தலைமையில் மிகச்சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது 9447 ஆண் தொழிலாளர்களுக்கும், 9418 பெண் தொழிலாளர்களுக்கும் ஆக மொத்தம் 18865 தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி,சேலைகள் உடன் பொங்கல் தொகுப்பினை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 மையங்களில் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு,பவானி,அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி,கொடுமுடி, தாளவாடி போன்ற இடங்களில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டன‌. ஒரு வேஷ்டியின் மதிப்பு 292 ரூபாயும், ஒரு சேலையின் மதிப்பு 295 ரூபாயும், பொங்கள் தொகுப்பின் மதிப்பு 450 ரூபாயும் ஆகும். இதற்காக மத்திய அரசின் நிதியான 37 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வேட்டி, சேலைகளை கைத்தறி துறையின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது இதற்காக கோ-ஆப்டெக்ஸ் தலைமை இடமான சென்னையிலிருந்து வந்திருந்த உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த ஒன்றரை மாதமாக ஈரோட்டில் முகாமிட்டு தங்களின் நேரடி பார்வையில் இரவு,பகலாக கண்விழித்து வேட்டி, சேலைகளை கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர் வேட்டியும், சேலையும் மிக தரமான, திடமான திருமண கோலத்தில் உள்ள புதுமண தம்பதியினர் உடுத்தும் அளவுக்கு மிக நேர்த்தியாக இருந்தது வேட்டியும், சேலையும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கைத்தறித்துறை அமைச்சர் மணியன் ஆகிய அமைச்சர்கள் மிகச்சிறப்பாக இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உள்ளார்கள். நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவரையும் தொலைபேசியில் அழைத்து ஒருவர் விடாமல் இந்தப் பொங்கல் தொகுப்பினை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கியுள்ளனர் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை போல தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற பொங்கல் தொகுப்பும் இலவச வேட்டி, சேலையும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளார்கள் தமிழக அரசு இதை தீவிரமாக பரிசீலனை செய்து மற்ற நலவாரியங்களில் உறுப்பினர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *