கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் அவர்கள் உத்தரவுபடி, 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு அறிவுரைகளை வழங்கினார்கள்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் அவர்கள் உத்தரவுபடி, 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் AKT பொறியியல் கல்லூரியில் கள்ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் திரு.இராஜதாமரைபாண்டியன், உதவி ஆய்வளர்கள் திரு.மணிகண்டன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.தர்மராஜ் மற்றும் காவலர்கள் சகிதம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனம் ஓட்டுதல் சம்பந்தமாக அறிவுரைகள் வழங்கியும், 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் வாகனத்தை இயக்க கூடாது, பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் படிகளில் பயணம் செய்ய கூடாது, சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கியதுடன் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கியும், மாணவர்கள் தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடக்கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *