கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது….
கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க பழமையான திருக்கோவில்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஒன்று. இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி காலை கணபதி ஹோமம் இதனை தொடர்ந்து தேவார திருமுறை ஓதுதல் போன்றவை நடந்தன. இதனை அடுத்து செண்டை மேளம் மற்றும் நாதஸ்வர இன்னிசையுடன் கோவிலின் திருக்கோகொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோயில் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாக்களின் போதும் இன்னிசை மெல்லிசை மற்றும் கலைஞர் செல் நடக்கிறது ஒன்பதாவது திருவிழாவான வரும் 25ஆம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. பத்தாம் திருவிழா என்று சுவாமிக்கும் அம்பாளுக்கும் ஆராட்டு விழா நடக்கிறது.