கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை தொடங்கினார்கள். ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் இந்த தவக்காலத்தினை நோன்பு இருந்து அனுசரிக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் எப்ரல் மாதம் 4 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 40 நாட்கள் முன்னதாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை நேற்று தொடங்கினார்கள்.சாம்பல் தினமான தொடங்கும் இந்த தவக்கால நிகழ்சிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலங்களில் திருப்பலியுடன் தொடங்கியது. இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவூட்டும் வகையிலும் மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் எனவும் இந்த சாம்பலானது நெற்றியில் பூசப்படுகிறது. சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரையிலான 40 நாட்கள் தவக்காலத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து நோன்பு இருக்கும் கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்தல் மற்றும் ஆஸ்பத்திரியில் மற்றும் சிறையில் துன்புறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுகின்றனர்.மனிதர்களின் மரணத்தை இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்…