திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் நிலுவைத் தொகை ரூ.540.81 கோடி தள்ளுபடி செய்யப்பட உள்ளதால் 50,616 விவசாயிகள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

Loading

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

என்பது வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழி. உழவுத்தொழில் அன்றி, பிற தொழில்களைச் செய்யும் அனைவரையும், உழவர்களே தாங்குவதால், அவர்களே இந்த உலகத்திற்கே அச்சாணி போன்றவர்கள். ஒரு நாட்டின் வளம், அந்த நாட்டின் விவசாயத்தைப் பொறுத்தே அமையும். அதனால்தான், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பல திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த, அதிக நிதி ஒதுக்கீடும் வழங்கினார்கள். அந்த வழியை வழுவாமல் பின்பற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு, வேளாண் பெருமக்களின் நலன் பேணவும், வேளாண்மை செழிக்கவும் பல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் தொழில் செழிக்க நுண்ணீர்ப் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையம், வேளாண் விற்பனை மையங்கள் மேம்பாடு, காய்கறி, பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க சந்தை தொடர் கட்டமைப்புத் திட்டம், உயர்தொழில்நுட்ப சாகுபடி, பயிர் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் மாண்புமிகு அம்மாவின் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் துயர் ஏற்படும்போதெல்லாம், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016-ஆம் ஆண்டு மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த ரூ.5,318.73 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 இலட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.

2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயப் பெருமக்களுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணத் தொகையாக மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வு செழிக்க, பல்வேறு நலத்திட்டங்களும், வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாடிநக்கை பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செடீநுத விவசாயிகள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர். இந்தப் பேரிடர், அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது.

வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பாராமல், சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித்தொகை ரூ.1,717 கோடியை 16.43 இலட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு, அந்தத் தொகையையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கீழே விழுந்தவர்களை மேலே தூக்கி விட்டால் மட்டும் போதாது, அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 50,616 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.540.81 கோடி தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

மாண்புமிகு அம்மாவின் அரசு தற்போது பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளது.

விவசாய பயிர்கடன் தள்ளுபடி பெற்ற பட்டிவீரன்பட்டியை சேர்ந்த திரு எம்.ராஜா அவர்கள் தெரிவித்ததாவது:

நான் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 நபர்கள் உள்ளனர். நான் பட்டிவீரன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.90 ஆயிரம் பயிர் கடனாக பெற்று விவசாயம் செய்து வந்தேன்.

விவசாயத்தில் போதிய மகசூல் இன்றி, வருமானம் இல்லாமல், வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். மீண்டும் கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட்டார். அதனை அறிந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை போன்ற விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு திரு எம்.ராஜா அவர்கள் தெரிவித்தார்.

விவசாய பயிர்கடன் தள்ளுபடி பெற்ற அய்யம்பாளையத்தை சேர்ந்த திரு அ.கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததாவது:

நான் அய்யம்பாளையத்தில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழை குடும்பமாகும். அய்யம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.34 ஆயிரம் பயிர்கடன் பெற்று விவசாயம் செய்தேன். விவசாயத்தில் வரும் வருமானத்தினை கொண்டு கடன் தொகையை செலுத்த சிரமமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்து விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ளார். பயிர்கடன் தள்ளுபடி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விவசாயக் பயிர்கடன் தள்ளுபடி பெற்ற அய்யம்பாளையத்தை சேர்ந்த திரு.அ.கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.

வெளியீடு
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *