கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலியான சோகம்…

Loading

கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலியான சோகம்,

திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி அருகே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது சித்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த 6 பேரில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அதே காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் 3 உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கார் மீது மோதிய அரசு பேருந்து சம்பவ இடத்தில் கவிழ்ந்தது. அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு நல்வாய்ப்பாக லேசான காயத்துடன் ஓட்டுனரின் சாதுரியத்தால் அனைவரும் உயிர் தப்பினர் என்று பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.

மாருதி ஆல்டோ காரில் (Alto tn 10 AB 6978) பயணம் செய்த ஆறு பேரில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியானதற்கு காரணம் கார் ஓட்டுனரின் தூக்கம் காரணமாக இருக்கலாமென்று அந்த காருக்கு பின் சென்ற மாருதி டிசையர் கார் ஓட்டுனர் தெரிவித்தார்.

மாருதி டிசையர் கார் (TN 91J 5140 SWIFT DZIRE) மீது அரசு பேருந்து மோதி காருக்கு முன்பக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பயணம் செய்தவர்களுக்கு நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்தில் பலியான 3 பேரும் சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த மூன்று பேர் ஸ்ரீபால் 42 , சாந்தி 60, பிரியா 34.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு சேர்க்கப்பட்டுள்ள மூன்று பேர் சதீஷ் 68, மிருதுலா 8, ஆர்யா 12 என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கார்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், திருவண்ணாமலை நகர ஏஎஸ்பி கிரன் சுருதி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீட்பு பணி மற்றும் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *