கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் ரத்து. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் கோரிக்கை மனு…
கன்னியாகுமரி மாவட்டம் சைமன் காலனி மீன்வளத் துறை அலுவலகத்திற்கு உட்பட்ட தூத்தூர் மண்டல நாட்டுப்படகு மீனவர்களுக்கு இதுவரை மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென 540 நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான மண்ணெண்ணெய் மானியத்தை மீன்வளத் துறையினர் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. மார்த்தாண்டம் துறையூரில் மட்டும் 202 நாட்டுப்படகு மீனவர்கள், மீனவர் ஒருங்கிணைப்பு சங்கத்தைச் சேர்ந்த 45 உறுப்பினர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் மீனவர்களை அவர்கள் அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது இதனைத்தொடர்ந்து மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் ஏராளமான மீனவர்கள் நாகர்கோவில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.