அம்மா கிளினிக் மூலம் கிராம மக்கள் பயனடைவார்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு…
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்கிராமத்தில் அம்மாகிளினிக் திறப்பு விழா நடைபெற்றது .விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார் . மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார் ..திருவண்ணாமலை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜிதா வரவேற்று பேசினார்.இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார்.
விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசும்போது, கிராம மக்கள் அனைவரும் மருத்துவ வசதி பெறும் வகையில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு கிராம மக்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளலாம்.மேலும் அறுவை சிகிச்சை பெற ஆலோசனை பெற்று மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.இந்த மருத்துவ வசதியை மக்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.