தேமுதிக வுடன் கூட்டணி வைக்கும் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்: அவைத்தலைவர் இளங்கோவன் சேலத்தில் பேட்டி:
சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில்,பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுபா ரவி முன்னிலை வகித்தார். அவைத்தலைவரும், தேர்தல் மண்டல பொறுப்பாளருமான இளங்கோவன்,தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி, தொழிற்சங்க பேரவை பொருளாளர் முஜிபூர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கழக தொண்டர்கள் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் தனித்து போட்டியிட்டாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கேப்டனை வெற்றி பெற செய்ய வேண்டும் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நிருபர்களிடம் மாநில அவைத்தலைவர் இளங்கோவன் பேசும்போது;
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது கேப்டன் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு சிறப்புடன் செயல்படுவோம் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,மாவட்ட துணை செயலாளர்கள் சந்திரன், கமலா கருப்பண்ணன், தொகுதி பொருப்பாளர்கள் கண்ணன், குமார், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி முஹம்மத் அலி, மாவட்ட இளைஞரிணி செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், வெங்கடேஷன், குமரிகாந்தன், சசிகுமார், கார்த்தி, கர்ணன், தங்கராஜ், செந்தில், பசுபதி, சுரேஷ், சுகுமார், வேணுகோபால், ரத்தினவேல் மற்றும் மாவட்ட நிர்வாகி வேலாயுதம் மற்றும் பலர் உடனிருந்தனர்.