திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் :
திருவள்ளுர் பிப் 12 : தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தை அமாவாசை சிறந்ததாகும்.
அதே போல் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில் அமாவாசையான இன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், நேர்த்திக் கடன்செலுத்தவும் கொரோனா காரணமாக 11 மாதங்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்ரு தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அவதார உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு பதிலாக இந்த முறை கொரோனா தொற்று காரணமாக சாதாரணமாக நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
=================================================================================