குடி குடியினை கெடுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப மது குடிப்பதால் பல நபர்கள் உயிர் இழந்தும், பல குடும்பங்கள் சாப்பாட்டிற்கே வழியின்றியும், பல குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கபட்டு வரும் சூழ்நிலையில்:
குடி குடியினை கெடுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப மது குடிப்பதால் பல நபர்கள் உயிர் இழந்தும், பல குடும்பங்கள் சாப்பாட்டிற்கே வழியின்றியும், பல குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கபட்டு வரும் சூழ்நிலையில்: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் ஸ்டேட்பேங்க் எதிர்புறம் அமைந்துள்ள அரசு மதுபான கடை? தொலைபேசி நிலையம், அஞ்சல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , காவல் நிலையம் பாரத்ஸ்டேட் வங்கி உள்ளிட்ட முக்கிய பல்வேறு அரசு அலுவலங்கள் உள்ள இந்த பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் இந்த சாலையில் நடந்து வரும் போது மன உளைச்சல் ஏற்படும் நிலை?பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி என்பதாலும், இந்த சாலையில் அரசு அலுவலங்களுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள் என பலதரப்பட்டோர் பாதிக்கபடாமல் இருக்கவும், இதனை மையமாக கொண்டு பல காலமாக செயல்பட்டு வரும் இந்த அரசு மதுபான கடையினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா?நீலகிரி மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம்?பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் கேள்வி?