Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – பிப்ரவரி 10, 2021
சென்னை: சார்வரி வருடம் தை 28ஆம் தேதி பிப்ரவரி 10, 2021 புதன்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 01.09 மணி வரை அதன்பின் அமாவாசை திதி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.12 மணி வரை அதன் பின் திருவோணம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம் – சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளன. இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும் உதவியும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் லாபம் கிடைக்கும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம்
ரிஷபம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பாக்ய ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். வேலையில் இருந்த மந்த நிலை மாறும். பூர்வீக சொத்துப்பிரச்சினையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
மிதுனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பேச்சுக்களை தவிர்த்து விடவும். அஷ்டம ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. வீட்டை விட்டு வெளியே சென்றாலும் அமைதியாக இருப்பது நல்லது.
கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீர்கள். இன்றைக்கு பணம் அபரிமிதமாக வரும் கடன் பிரச்சனை நீங்கும்.
சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனதில் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.
கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.
தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெய்திகள் தேடி வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். ராசியில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடி அதிகரிக்கும். வேலைபளு கூடினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 12ஆம் வீட்டில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன அமைதி ஏற்படும்.
மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 11ஆம் வீட்டில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று நீங்கள் எந்த செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. வேலை விசயமாக செய்யும் பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறையை சமாளிக்கலாம்.