பாரம்பரிய உணவு திருவிழா – கலாம் உலக சாதனை- 2021
சேவ்& கேர் தொண்டு நிறுவனத்தின், நிறுவனர் DR. M. பவானி மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் நடத்திய கலாம் உலக சாதனை -2021ல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம் *தமிழ் பாரம்பரிய உணவின்* முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியான *பாரம்பரிய உணவு திருவிழா* நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் தயாரிக் கப்பட்டு அவற்றின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் மாணவர்கள் பெற்றோர்கள் எடுத்துரைத் தனர். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அரும்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R.பிரபு தாஸ் வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
L.அணில் குமார்,கலாம் உலக சாதனை நிறுவனர், T.குமரவேல் மற்றும் தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கத்தின் நிறுவனர் தலைவர் B. சுரேஷ் சமூக ஆர்வலர் தொழிலதிபர் B.சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்றைய கொரோனா காலகட்டத்தில் நம் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாபெரும் அளவில் சிறப்பாக அரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.