“நியோ” பிராண்ட் ஆண்கள் உள்ளாடைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறது, வீ ஸ்டார் நிறுவனம்!
“நியோ” பிராண்ட் ஆண்கள் உள்ளாடைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறது, வீ ஸ்டார் நிறுவனம்!
வீ-கார்டு (V Guard) மற்றும் வொண்டர்லா (Wonderla) தீம் பார்க் உரிமையாளர்களின் மற்றொரு அங்கமாகிய வீ ஸ்டார் கிரியேஷன்ஸ் (VStar Creations), நிறுவனம், ‘நியோ’ (Neo) என்னும் பிராண்ட் பெயரில் ஆண்களின் மாறிவரும் விருப்பங்களுக்கேற்ப வசதியாக அணியக்கூடிய, ஸ்டைலான உள்ளாடைகளை உருவாக்கியுள்ளது.
இந்தப் புத்தம் புதிய ‘நியோ’ ரகம் பல புதுமைகளைக் கொண்டுள்ளது. துணி வகை, வண்ணம், ஸ்டைல், ஃபிட்டிங் மற்றும் எலாஸ்டிக் டிசைன் என அனைத்துமே புத்தம் புதிய வடிவத்தில், புதிய கற்பனைகளுடன் இந்த நூற்றாண்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. வீ ஸ்டார் நிறுவனத்தின் படைப்புகள் அனைத்திலுமே வசதியும் தரமும்தான் அடிப்படையாக இருக்கும். ‘நியோ’ உள்ளாடை கலெக்ஷன்கள் ஹியூ ராக்ஸ் (Hue Rocks), எலைட் (Elite) மற்றும் கிளாசிக் (Classic) என்ற மூன்று வகைகளில் பனியன்கள், ஜட்டிகள் மற்றும் டிரங்குகள் (Trunks) போன்ற அனைத்தும் கிடைக்கும்.
இது குறித்து, வீ ஸ்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திருமதி. ஷீலா கொச்சௌசேப் (Mrs. Sheela Kochouseph) பேசுகையில், “‘நியோ’ உள்ளாடைகள் மிக ஆழமான சந்தை ஆய்வுகளுக்குப் பிறகும், வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்ட பிறகும் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் மாறிவரும் ஆண்களின் உள்ளாடைகளின் ஸ்டைல்களுக்கு ஏற்ப இவை உருவாக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
வீ கார்டு நிறுவனத்தின் தலைவர் திரு. கொச்சௌசேப் சிட்டிலப்பள்ளி (Mr. Kochouseph Chittilappilly) இது குறித்து கூறுகையில், “ஆண்களின் உள்ளாடைப் பிரிவில், வீ ஸ்டாரின் வளர்ச்சி இந்த ‘நியோ’ கலெக்ஷன்களால், புதிய உச்சத்தைத் தொடும்” என நம்பிக்கையுடன் கூறினார்.
உலகத் தரம் வாய்ந்த பல்வேறு டிரெண்டுகளின் அடிப்படையில், ‘நியோ’ கலெக்ஷன்கள் உன்னதமான பிரீமியம் கோம்ப்ட் பருத்தி (Premium Combed Cotton) மற்றும் நீளக்கூடிய எலாஸ்டேன் ஸ்ட்ரெட்ச் (Elastane Stretch) துணிவகை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான் எப்போதும் துடிப்புடன் இருக்கும் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் விரும்பும் உன்னதமான வசதியை வழங்குகின்றன என உறுதியாகக் கூறலாம். மிக மிக மிருதுவான துணியில் தயாரிக்கப்பட்ட இந்த ‘நியோ’ ஆடைகள், வெயிஸ்ட்பேண்ட் (Waistband) மற்றும் இளமை ததும்பும் டிசைன்களில் தயாரிக்கப்படுகினறன.
இது குறித்து வீ ஸ்டாரின் செயல்முறை இயக்குனர் திரு. வினு வர்கீஸ் (Mr. Vinu Verghese) கூறுகையில், “‘நியோ’-வை அறிமுகப்படுத்தியதால் வீ ஸ்டார், அதி நவீன ஆண்கள் உள்ளாடை உலகில் முன்னணி பிராண்டாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. தங்கள் வாழ்க்கையில் கனவுகள் பலவற்றைச் சுமந்து, அவற்றை நனவாக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இவை இருக்கும்” என்றார்.
‘நியோ’ தயாரிப்புகளின் உன்னதமான ரகங்கள், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள வீ ஸ்டாரின் பிரத்தியேக பிராண்ட் அவுட்லெட்கள், பெரிய துணிக்கடைகள் மற்றும் பிரபலமான ஆன்லைன் வலைதளங்களிலும் கிடைக்கும்.
கேரளாவின் முன்னணி உள்ளாடை மற்றும் லைஃப் ஸ்டைல் பிராண்டான வீ ஸ்டார், ‘நியோ’வை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியா முழுவதிலும் மேலும் பல்வேறு வெளிநாட்டு மார்க்கெட்டுகளிலும் தமது வெற்றித் தடயங்களைப் பதிக்கும். மேலும் உள்ளாடை துறையில் ஒரு மிகப் பெரிய முன்னணி பிராண்டாக உருவெடுக்கும் என்பதும் உறுதி.