கன்னியாகுமரி நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்….
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், கடந்த கால போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், லட்ச கணக்கான காலி பனியிடங்களை நிரப்ப வேண்டும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல் மற்றும் ஊதிய பாகுபாடு களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…