இன்றைய ராசிபலன்கள் (09-02-2021)

Loading

சென்னை: சார்வரி வருடம் தை 27ஆம் தேதி பிப்ரவரி 09, 2021 செவ்வாய்க்கிழமை. திரயோதசி திதி இரவு 02.05 மணி வரை அதன்பின் சதுர்த்தசி திதி. பூராடம் நட்சத்திரம் பகல் 02.38 மணி வரை அதன் பின் உத்தராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷபம்ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. செவ்வாய்கிழமை மங்களகாரகன் செவ்வாய் பகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய வேண்டாம் சிக்கனம் தேவை.

மிதுனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைவீர்கள்.

கன்னி – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் இன்றைக்கு லாபம் வரும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். வேலை தொடர்பாக செல்லும் வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *