கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் மீது நேசமணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு…

Loading

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதற்காக நாகர்கோவில் மாநகரம் முழுவதும் சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. இதனிடையே குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்தை சீர் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் விதிமுறைகளை மீறி திமுக கொடிகளை அக்கட்சியினர் பறக்க விட்டிருந்தனர், இதனை பாதுகாப்புக்கு பணிக்கு வந்த போலீசார் , கொடிகளை அகற்ற முயன்றபோது அங்கு வந்த திமுக மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ் ராஜன் போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பேசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை தொடர்ந்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஜயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ., சுரேஷ் ராஜன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் வரம்பு மீறி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *