சக்கா ஜாம் என்ற பெயரில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயி சங்கங்கள் அறிவிப்பு!
டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கு மேலாக போராட்டி வரும் விவசாயிகள், டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. எனினும், நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கனவே அறிவித்தபடி, மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.