தொழிலாளர் நலத்துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் இணைந்து நடத்திய புன்னகையை தேடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறியவும், பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், கடைகள் மற்றும் பல நிறுவனங்களில் வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களை அரசு காப்பகங்களில் ஒப்படைத்து நல்வழி படுத்தி குழந்தைகளை தங்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களிடமிருந்து புன்னகையை வர வைக்கும் நிகழ்வாக காவல்துறை, சமூக பாதுகாப்புதுறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் இணைந்து நடத்திய புன்னகையை தேடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேசன், காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தி மாவட்ட பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் நன்னடத்தை அலுவலர், திரு. புஷ்பராஜா, குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி. ரெக்ஸ்லின் தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி ஆய்வாளர் திருமதி.ஈவ்லின் ஷர்மி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திரு கிளமெண்ட் வின்சிலி சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் திருமதி. கேத்தரின் மேரி மற்றும் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 01.02.2021 முதல் 15.02.2021 வரை நடைபெறுகின்றது.
Attachments area