சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூபாய் 12.90 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை: மாவட்ட ஆட்சியர் ராமன் திறந்து வைத்தார்:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதியதாக கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை நோயாளிகளுக்கான காத்திருப்பு அறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.90 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை நோயாளிகளுக்கான காத்திருப்பு அறையினை,
மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில்,
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.