கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பைக்குழி பத்ரகாளி அம்மன் திருக்கோவில் புனரோத்தாரண நூதன ராஜாகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பைக்குழி பத்ரகாளி அம்மன் திருக்கோவில் புனரோத்தாரண நூதன ராஜாகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியைகாண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். ஶ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் சுமார் 40 ஆண்டுகளாக அப்பகுதியில் கூரை கட்டடத்தில் அமர்ந்து பத்ரகாளி தாய் அருள்பாலித்து வந்தார். தற்போது பத்ரகாளி அம்மன் கோவில் திருப்பணி நடைப்பெற்று ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. பின்னர் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்களுக்கு ஶ்ரீ பத்ரகாளி தாய் அருள் ஆசி வழங்கினார்.மேலும் கோவில் திருவிழாவாக இருதினங்கள் நடைபெறும் என்று கும்பாபிஷேக தினத்தில் இருந்து 41நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிப்பாடு நடைப்பெறும் என்று கொடுப்பைக்குழி பத்ரகாளி அம்மன் கோவில் நிர்வாகி.பி.ராமச்சந்திரன்(ரமேஷ் ) தெரிவித்தார்.