மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு ரூ.51.47 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 41 கழிவறைகள் 10 குளியளறைகள் 2 உடை மாற்றும் அறைகள் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகள் வசதிக்காக திருக்கோயிலுக்கு வடக்கு பக்கம் திருக்கோயில் சார்பாக ரூ.51.47 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 41 கழிவறைகள் 10 குளியளறைகள் 2 உடை மாற்றும் அறைகள் கட்டுமான பணிக்கு அன்று காலை 9.00 மணிக்கு இத்திருக்கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலர் திரு.க.ராமு அறங்காவலர் குழுத் தலைவர் திரு.ம.சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார் தேவராஜ்,ராமலிங்கம்,செல்வம்,வடிவேல்,சந்தானம் மற்றும் ஒப்பந்ததாரர் காஞ்சிபுரம் திரு எஸ்.கோதண்டபாணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.