மாநகராட்சி செய்ய தவறிய பணியை உடனே செய்து முடித்த துணை கண்காணிப்பாளர்….
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் திறந்து கிடக்கும் சாக்கடை குழியில் பலர் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. அந்த பகுதியில் ஆய்வுக்காக வந்த நாகர்கோவில் டவுன் துணை கண்காணிப்பாளர் திரு. வேனுகோபால் அந்த பகுதியில் உள்ள சாக்கடை குழியை பார்த்து அதன் மூலம் ஏற்படும் விளைவினை மனதில் கொண்டு அருகில் கிடந்த பெரிய சிமென்ட் செங்கல்களை கொண்டு சாக்கடை குழியை அந்த பகுதியில் பணிபுரியும் போலீசார் உதவியுடன் மூடினார். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களின் சேவையை கண்டு மாநகராட்சி ஊழியர்கள் செய்யும் பணியை போலீசார் செய்ததை மிகவும் பாராட்டினார்கள்…