திருவள்ளூரில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் :
திருவள்ளுர் பிப் 04 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட 17 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை செய்தமைக்காக பல்வேறு பிரிவினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பு பள்ளிகளில் பயிலும்; ஒவ்வொரு சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்கள் கை கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றிய பங்கு பெறுவார்கள்.
இந்த ஆண்டு கொரானா ஊரடங்கு உள்ள நிலையில் பள்ளிகள் செயல்படாத காரணத்தால் திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இணையதள வழியாக போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் திருவள்ளுர் மாவட்டத்தை சார்ந்த 17 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் நடனம், சமையல் கலை, ஓவியம் வரைதல், பாட்டு போட்டி, யோகா, விளையாட்டு போட்டிகள் , இசை கருவி வாசித்தல், போன்ற போட்டிகளில், கலந்து கொண்டு 364 பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கு பெற்று வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் கொரானா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை செய்தமைக்காக 11 வட்டாச்சியர்கள், அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 4 அரசு சிறப்பு மருத்துவர்கள் எலும்பு முறிவு மருத்துவர், மன நல மருத்துவர்,கண் மருத்துவர் மற்றும் காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில பணிபுரியும் பணியாளர்களுக்கும், சிறப்பு பள்ளிகளின் பொறுப்பாளர்கள்,சிறப்பாசிரியர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
===========================================================================