தலைவாசல் அருகே ஏரியில் இருந்து மண்ணை திருடி மணல் தயாரித்து விற்ற 10 பேர் கைது பொக்லைன் எந்திரம் 60 டன் மணல் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு புதூர் கிராமத்தில் அரசு அனுமதியின்றி ஏரியிலிருந்து மண்ணை திருடி ஜெனரேட்டர் உதவியுடன் வீடு கட்டுவதற்கு மணல் தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தலைவாசல் காவல் நிலையத்தில் மணிவிழுந்தான் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர் மற்றும் ஆத்தூர் தாசில்தார் அன்புச்செழியன் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மணல் தயாரித்து விற்பனை செய்த இடத்தை திடீரென்று ஆய்வு நடத்தினர்.
மேலும் 60 டன் மணலை பறிமுதல் செய்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மணலை திருடி வந்து
அதனை எந்திரங்கள் மூலம் மணலாக சுத்திகரித்து.
அதனை லாரிகள் மூலம் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதை தெரியவந்தது
இதை அடுத்த அனுமதியின்றி மணல் தயாரிக்க பயன்படுத்தி எந்திரம் பொக்லைன் எந்திரம் மற்றும் 60 டன் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மணிவிழுந்தான் தெற்கு புதூர் சேர்ந்த நில உரிமையாளர் தமிழரசன் வயது 39 மணலை தயாரித்த சதீஷ்குமார் வயது 40 பிரபு 30 சம்பேரி பிரபாகரன்வயது 30 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆப்ரேட்டர் வெண்மணி வயது 23 அருண்குமார் வயது 21 கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சேர்ந்த குதிரை மவுலி கிராமத்தைச் சேர்ந்த ரித்தீஷ் வயது 36 கொல்லங்கோடு சேர்ந்த மணி வயது 43 கொடும்பு ஓலாச்சேரி சேர்ந்த அன்சாத் வயது 29 கோவிந்த புரத்தை சேர்ந்த ஷாஜகான் வயது 34 ஆகியோர் 10 பேரை இந்த கைது செய்து சிறையில் அடைத்தனர்.