மனிதநேய மக்கள் கட்சி மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் திருச்சியில் ஜவஹிருல்லா தலைமையில் நடந்தது

Loading

மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மனிதநேய மக்கள் கட்சியை தமிழகத்தின் 7 மண்டலமாக பிரித்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தி வருகிறோம். இந்த வகையில் 7வது மண்டலமாக த மத்திய மண்டல கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
நிதி அமைச்சர் முழுக்க முழுக்க பெரும் முதலாலிகளுக்கு ஆதராவான பட்ஜட்டை தாக்கல் செய்து இருக்கிறார்.

இந்தியாவை மொத்தமாக பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் தான் இந்த பட்ஜெட் அமைந்து இருக்கிறது.

நரேந்திர மோடியின் ஆட்சி மாநில உரிமைகளை பறிக்க கூடிய ஆட்சியாக தான் உள்ளது.

செஸ் வரியை விதித்து இருக்கிறார்கள்- இதனால் மாநில அரசுக்கு வரும் நிதி குறையும்.

8 வழிச்சாலைக்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உள்ளது – ஆனால் இதை நிறைவேற்றியே தீருவோம் என கூறி உள்ளார்கள்.
பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மிக மிக அவதூறாக பேசி உள்ளார். அவரை குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும்.

தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகள் கேட்பது குறித்து எங்களது நிலைப்பாட்டை கூறுவோம்.

தமிழகம் திராவிட கட்சிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு மாநிலம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியால் மாநில உரிமைகள் பெரும் அளவில் பறிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக சட்டமன்றத்தில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று தீர்மானம் கொண்டு வந்தும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு என
3.5 % இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிமுக அரசு அதை சரிவர நிறைவேற்றவில்லை.
எனவே வரும் நாட்களில் அதனை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் உமர், உயர்நிலைக் குழு உறுப்பினர் சபியுல்லாஹ், அமைப்புச் செயலாளர்கள் தஞ்சை பாதுஷா, காதர்முகைதீன், மாநிலச் செயலாளர் சிவகாசி முஸ்தபா, மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக், மாநில அமைப்புச் செயலாளர் அச்சிறுப்பாக்கம் ஷாஜகான்ப், தலைமை பிரதிநிதி அனல் அக்பர், திருச்சி மாவட்ட தலைவர் உதுமான் அலி உள்ளிட்ட தலைமை நிர்வாகி களும், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் விவசாயிகள் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மத அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வில் திமுக கூட்டணியில் சிறுபான்மைருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *