பெத்தநாயக்கன்பாளையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கினர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும்144 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர் .இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு R.M சின்னத்தம்பி அவர்கள், ஏத்தாப்பூர் பேரூராட்சி கழகச் செயலாளர் ராஜமாணிக்கம் , பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கருத்திருமன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் , ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.