சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை, மாநிலத் தலைவர் பொன்.குமார் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்ட கட்டுமான மற்றும், மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹேமநாதன், செயலாளர் சரவணன், பொருளாளர் யுவராஜ் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இரும்பு,சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும்,பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும்,அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும்,மின் இணைப்பு விண்ணப்பத்தில், அரசின் அனுமதி பெற்ற மின் ஒப்பந்ததாரர்கள் கையொப்பம் உறுதிப்படுத்த வேண்டும்,மேலும் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான கட்டுமானத்திற்கான தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.