கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஊழியர் திட்டம் தொடர்ந்து வழங்கவும் சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவும் அகவிலைப்படி சரண் விடுப்பு வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள நான்கு லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள் போலீசாரால் கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.