கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…
*முத்திரைதாள் கட்டணத்தை குறைக்கக்கோரி நாடு தழுவிய அளவில் கட்டுமானம் மற்றும் மனை தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….*
பத்திரபதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும் கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும்கட்டுமானம் மற்றும் மனை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
இதில் கொரனோ ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழ்நிலையால் கட்டுமான துறை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கட்டுமானத் துறையை சீர்செய்திட கட்டுமானப் பொருட்களைக்காண விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் , பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கபட்டது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யுவராஜ் தலைமை தாங்கினார்.வி என் கண்ணன். ராதாகிருஷ்ணன். மற்றும்.கொளத்தூர் ராஜசேகரன்,அடங்கா அன்பு கோவிந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்