30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3 கிலா சந்தன கட்டைகளை பறிமுதல் …
3 total views , 1 views today
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரானபுரம் காப்புக் காட்டில் சமூக விரோதிகள் நடமாடுவதாக பாலக்கோடு வனசரகர் செல்வத்திற்க்கு தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து வனவர் அருனா, வன காவலர்கள் பழனி, கல்யாணசுந்தரம்.சங்கர் ஆகியோர், சீரணபுரம் காப்புக் காட்டிற்க்கு ரோந்து சென்றனர், அப்போது சீரியம்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் மாதேஷ் (46) என்பவர் சந்தன மரத்தை வெட்டி கொண்டிருந்தார் போலீசாரை கண்டதும் தப்பி ஒட முயன்றவரை வனத்துறையினர் பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3 கிலா சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.