துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.இராமநாதன் அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலை முழுவதும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் IPS அவர்கள் உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.இராமநாதன் அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலை முழுவதும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது மேல் வாழப்பாடி கிராமம் ஓடையில் 8 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் சுமார் 1600 லிட்டர் சாராய ஊரல்களும், மல்லிகைபாடி கிராமத்தில் உள்ள முண்டியூர் ஓடையில், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல்கள் 5 பேரல்களில் தலா 150 லிட்டர் வீதம் 750 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊரல்களின் உரிமையாளரை பற்றி விசாரித்த போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் முத்துசாமி என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது எதிரிகளை தேடிச் சென்ற போது தலைமறைவாக இருப்பது தெரியவந்தது, பின்பு புளித்த சாராய ஊரல்களை சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இன்று இதுவரை 2350 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளது.