கன்னியாகுமரி மேல் சபை உறுப்பினர் ஆதரவு சசிகலா பக்கமா? டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் அதிமுகவில் சலசலப்பு…
கன்னியாகுமரி:- திருமதி சசிகலா அவர்களுக்கு 2016ஆம் ஆண்டு நான்கு வருடசிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. சிறை தண்டனை முடிவுக்கு வரும் வேளையில் அவரது உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகி கடந்த சில நாட்கள் முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பூரண குணமடைந்து 27 ஆம் தேதி வீடு திரும்புவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவமனையிலிருந்து தனது பெங்களூர் உள்ள பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு செல்வி ஜெ. ஜெயலலிதவின் கார் ஒன்றை அதிமுகவின் கொடியுடன் தயார் நிலையில் வைத்துள்ளனர். அதிமுக கொடியுடன் கூடிய காரை பார்த்த அதிமுக நிர்வாகிகள் பலரும் கண்டன குரல்கள் எழுப்பினார்கள்
அதேவேளையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேல் சபை உறுப்பினர் திரு. விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாகன புகைபடத்தை வெளியிட்டார். இந்த செயல் சசிகலாவை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அம்மா ஜெயலலிதா அவர்களின் வாகனத்தை பார்த்தபோது அம்மாவின் ஞாபகம் வந்தது அதனால் டுவிட்டரில் பதிவிட்டேன். இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை எனவும் அம்மாவின் உண்மையான விசுவாசிகள் இதுதான் செய்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். இரண்டு நாள் முன்னதாக துணை முதலமைச்சர் திரு. ஓபிஎஸ் அவர்களின் மகன் சசிகலாவுக்கு பூர்ண குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துச் சொன்னது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் அடித்து ஒட்டிய கட்சி தொண்டர்கள் மீது அடிப்படை உறுப்பினர் பதவியை பறிக்கப்படத்து குறிப்பிடத்தக்கது. யார் யார் சசிகலா அவர்களின் விசுவாசிகள் என்று சசிகலா சென்னைக்கு வந்த பிறகே தெரியும் என கூறுகிறார்கள் அரசியல்