72வது குடியரசு தின விழாவில் ெகாரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வ தொண்டாற்றிய ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தன்னுக்கு பதக்கம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஜுனியர் ரெட் கிராஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் க.குணசேகரன், இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2020 – 2021ஆம் ஆண்டின் சிறப்பான பணியை பாராட்டி மிக சிறப்பாக தன்னார்வ தொண்டு செய்த ஜுனியர் ரெட்கிராஸ் ஆசிரியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம் அவர்களார் பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.* வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் சே.கணேஷ், ஷேக்மன்சூர், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் முரளி, வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கு,குணசேகரன், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி, நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகம் ஆகியோர் உடனிருந்தனர்.