வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் தலைமையில் இன்றுவேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.உடன் வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளர் பொற்செழியன் அவர்கள், SJ & HR காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் , ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்கள் உறுதிமொழியை ஏற்றனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.