தமிழர்‌ திருநாள்‌ பொங்கல்‌ பண்டிகையினை சிறப்பாக கொண்டாட ரூ.2500/- ரொக்கத்தொகையுடன்‌ கூடிய சிறப்பு பொங்கல்‌ பரிசுத்தொகுப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு அரியலூர்‌ மாவட்ட மக்கள்‌ புகழாரம்‌.

Loading

தமிழர்‌ திருநாள்‌ பொங்கல்‌ பண்டிகையினை சிறப்பாக கொண்டாட
ரூ.2500/- ரொக்கத்தொகையுடன்‌ கூடிய சிறப்பு பொங்கல்‌ பரிசுத்தொகுப்பு
வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு அரியலூர்‌
மாவட்ட மக்கள்‌ புகழாரம்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அரசு மக்களின்‌
நலன்‌ கருதி பல எண்ணற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில்‌ பொங்கல்‌ திருநாளைச்‌ சிறப்பாக கொண்டாடும்‌ விதமாக அறிவித்துள்ள
திட்டம்‌ பொங்கல்‌ பரிசுத்தொகுப்பு.

அதன்படி, தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ ,பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சா்‌ அவாகள்‌ தமிழகத்தில்‌ பொதுவிநியோகத்‌ திட்டத்தில்‌ பயன்பெறும்‌
2.06 கோடி அரிசி பெறும்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு,ரூ.2500/- ரொக்கத்‌
தொகையுடன்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌
அறிவித்து தொடங்கி வைத்தார்கள்‌.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பொதுவிநியோத்திட்டத்தின்கீழ்‌ மாநிலத்தில்‌
அரிசிபெறும்‌ குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, | கிலோ சர்க்கரை, ஒரு முழுக்‌
கரும்பு, தலா 20 கிராம்‌ முந்திரி, 20 கிராம்‌ திராட்சை மற்றும்‌ 5 கிராம்‌ ஏலக்காய்‌ அடங்கிய
பொங்கல்‌ பரிசு தொகுப்புடன்‌, ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500/- வீதம்‌ ரொக்கமாக
வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்‌.

அந்த வகையில்‌ அரியலார்‌ மாவட்டத்தில்‌ செயல்படும்‌ 440 பொதுவிநியோத்‌ திட்ட
அங்காடிகளில்‌ இணைக்கப்பட்டுள்ள 2,33,739 குடும்ப அட்டைதாரர்களுக்கு முந்திரி, திராட்சை,
ஏலக்காய்‌, கரும்பு, சர்க்கரை மற்றும்‌ பச்சரிசியபுடன்‌, தலா ரூ.2500/- வீதம்‌ ரொக்கமும்‌, தொகுப்பு
பையும்‌ சேர்த்து விலையில்லா வேட்டி, சேலைகள்‌ வழங்கப்படூகிறது.
பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு மற்றும்‌
ரொக்கத்தொகை ரூ.2500/- தொடர்புடைய நியாய
விலைக்கடைகள்‌ மூலமாக 04.01.2021 அன்று
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா,
அவர்கள்‌, ஜெயங்கொண்டம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌
திரு.ஜெ.கே.என்‌.இராமஜெயலிங்கம்‌ அவர்கள்‌
முன்னிலையில்‌ பொதுமக்களுக்கு ரூ.2500/-
ரொக்கத்தொகையுடன்‌ கூடிய சிறப்பு பொங்கல்‌
தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்கள்‌.

ரூ.2500/- ரொக்கத்தொகை மற்றும்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பு பெற்ற
ஜெயங்கொண்டம்‌ அண்ணாநகரைச்‌ சேர்ந்த திருமதி.ரேவதி என்பவர்‌
தெரிவிக்கையில்‌,

எனது குடும்பம்‌ ஏழ்மையான குடும்பம்‌. நாங்கள்‌ தினக்கூலி வேலை
செய்து. வருகிறோம்‌. மேலும்‌, கொரோனா காலத்தில்‌ கூலி வேலை
கிடைப்பது மிகவும்‌ சிரமமாக இருந்தது. இந்த நிலையில்‌ வரக்கூடிய
பொங்கலை குடும்பத்தோடு சிறப்பாக எவ்வாறு கொண்டாடுவது என்று
கவலையுடன்‌ இருந்து வந்தோம்‌. இந்நிலையில்‌, மாண்புமிகு தமிழக
முதலமைச்சர்‌ அவர்கள்‌ ரூ.2500/- ரொக்கத்துடன்‌ கூடிய பொங்கல்‌ பரிசு
தொகுப்பை வழங்கப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அதன்படி, இன்று எனது
குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ரூ.2500/- ரொக்கத்துடன்‌ கூடிய பொங்கல்‌ பரிசு
தொகுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இதன்‌ மூலம்‌ வரக்கூடிய பொங்கல்‌
திருநாளை சீரும்‌ சிறப்புபன்‌ கொண்டாட வழிவகை செய்த மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கோடாட கோடி நன்றி என தெரிவித்தார்‌.

மேலும்‌, ரூ.2500/- ரொக்கத்தொகை மற்றும்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பு பெற்ற விக்கிரமங்கலம்‌
கிராமத்தைச்‌ சேர்ந்த விவசாயி திரு.முனியன்‌ என்பவர்‌ கூறுகையில்‌,

நான்‌ வந்து விவசாயம்‌ செய்து வருகிறேன்‌. எனது விவரம்‌
தெரிந்த நாள்‌ முதல்‌ எனது குடூம்பத்தினர்‌ அனைவரும்‌
விவசாயம்‌ சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்‌.
அதிலும்‌ குறிப்பாக எங்கள்‌ பகுதிகளைச்‌ சேர்ந்த விவசாயிகள்‌
௮னைவரும்‌ பொங்கல்‌ பண்டிகைக்கு தேவைப்படும்‌
செங்கரும்புகளை அதிக அளவில்‌ சாகுபடி செய்து வருகிறோம்‌.
இதற்கு முந்தைய காலங்களில்‌ நாங்கள்‌ பயிர்‌ செய்து வந்த
செங்கரும்புகள்‌ இயற்கை இடற்பாடுகளால்‌ சரியான விளைச்சல்‌
கிடைக்காமலும்‌, சரியான விளைச்சல்‌ இருக்கும்‌ பட்சத்திலும்‌
செங்கரும்புக்குரிய விலைக்கிடைக்காமலும்‌ வருமானம்‌
இல்லாததாலும்‌ பொங்கல்‌ திருவிழாவை சிறப்பான முறையில்‌
கொண்டாட முடியாமல்‌ இருந்து வந்தோம்‌. இச்சூழ்நிலையில்‌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ரூ.2500/- ரொக்கத்துடன்‌ கூடிய பொங்கல்‌ பரிசு
தொகுப்பை வழங்கப்படும்‌ என தெரிவித்தார்கள்‌. மேலும்‌, இந்த பொங்கல்‌ தொகுப்பில்‌ முழு நீள
கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல்‌ செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோம்‌ செய்யப்படும்‌
என தெரிவித்தார்கள்‌. இதன்‌ மூலம்‌ நடப்பாண்டில்‌ எங்களது வயலில்‌ விளைந்த செங்கரும்பிற்கு
உரிய விலை கிடைத்ததுடன்‌, ரூ.2500/- ரொக்கத்துடன்‌ கூடிய பொங்கல்‌ பரிசு தொகுப்பும்‌
வழங்கப்பட்டது. இதனால்‌ நடப்பு பொங்கல்‌ திருவிழால்‌ ரூ.2500/- ரொக்கத்துடன்‌ கூடிய பொங்கல்‌
பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதுடன்‌, எங்களது கரும்பிற்கும்‌ உரிய விலை கிடைக்க வழிவகை
செய்து, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்‌ பொங்கல்‌ திருநாளை கொண்டாட வழிவகை செய்த மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி என கூறினார்‌.

இக்களப்பணியில்‌,
க.சரவணன்‌,
செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌,
அரியலூர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *